Friday, September 22, 2006

ஒரு வரியில சொல்லணும்னா...

எல்லா படைப்பையும் படிச்சிட்டு தான் ஓட்டு போடணும்னு முடிவு பண்ணியாச்சுங்கண்ணா. ஓட்டும் போட்டாச்சுங்க. நாம படித்ததில் மனதில் பட்டதை இங்கே சுருக்கமாக..


1. சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி - சிமுலேஷன்
"லிப்ட் கேட்பதிலேயே சிரிக்க வைக்கிறார்"

2. லிப்ட் - சிறில் அலெக்ஸ்
"நிதர்சனங்களைச் சொல்லும் ஒரு நல்ல படைப்பு"

3. போட்டிக்காக - வெண்பா - அபுல் கலாம் ஆசாத்
"வெண்பா எல்லாம், ஒரே கலகலப்பா..."

4. தவிப்பு - நெல்லை சிவா
"தவித்தாலும் தப்பித்தது மனசுக்கு நிம்மதி"

5. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர் - பினாத்தல் சுரேஷ்
"புதிர் போட்டு புதிர் போட்டு, புதிதாய் கதை படைக்கிறார்"

6. ஐந்து வெண்பாக்கள் - போட்டிக்காக - அபுல் கலாம் ஆசாத்
"இதுபோல் வெண்பா, இன்னும் வேண்டுமப்பா !"

7. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - சேவியர்
"எளிமையாய், அதே நேரம் வலிமையாய் !"

8. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - demigod
"லிப்ட் என்றால் பேயும் இரங்கும்"

9. கொஞ்சம் தூக்கி விடலாம்! - யதா
"சதா கதை கேட்பதை விட யதா சொல் கேட்பது அவசியம்"

10. லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி - ஜி.கௌதம்
"ஒவ்வொரு வரியிலும் பதற வைத்து, கடைசியில் நம்மையும் கதற வைக்கிறார்."

11. லூர்து - சிறுகதை - போட்டிக்காக - அபுல் கலாம் ஆசாத்
"ஷேக் அலியின் மனதில் மட்டுமல்ல, நம் மனதிலும் உயர்வாய் நிற்கிறார் லூர்து"

12. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - Krishnaraj.S
"வாத்தியாரு கொடுத்த லிப்டை அவருக்கே கொடுத்திட்டாரு பெருசு !"

13. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - வசந்த்
"விழித்திழச் சொல்லும் ஒரு சிறு கவிதை"

14. லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட் - சனியன்
"இவர் சந்தர்ப்பத்தை நழுவ விட்டதில் ஏனோ நமக்குப் புன்னகை பிறக்கிறது"

15. இன்னா சார்? - வசந்த்
"கவர்னருக்கே லிப்ட் கொடுத்தவர வெச்சி கதைய லிப்ட் பண்ணியிருக்காருங்க"

16. சின்னதாக ஒரு லிப்ட் - யதா
"தைரியமாக எதிர்கொண்டால், வாழ்க்கையே ஒரு லிப்டுதான்"

17. லிஃப்ட் - மகேந்திரன்.பெ
"லிஃப்ட் நிற்பதற்குள் படித்துவிடக் கூடிய நாலு வரி சிரி-கதை"

18. கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..? - வசந்த்
"வரலாற்றுக் கதைக்களம். அழகான உரையாடல்களில்."

19. அன்புத் தோழி, திவ்யா..! - வசந்த்
"விட்டுக்கொடுத்தலும் லிப்டுதான்"

20. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி
"லிப்டு கேட்டு இவர் போகுமிடமெல்லாம் போய் வந்த இனிய உணர்வு. யதார்த்தமாய், பல பரிமாணங்களில் வியக்க வைக்கிறார்"

21. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா
"வாழ்க்கையின் விளிம்புகளில் இருந்து திசைமாற்றி மனதை வருடிச்செல்லும் இனிய காதல் கதை"

22. சாந்தியக்கா - பாலபாரதி
"என்றைக்காவது, யாருக்கேனும் இதுபோல் நம்பிக்கையளிக்க வேண்டும் என அழுத்தமாய் ஒரு பாதிப்பை உருவாக்குகிறது இக்கதை."

23. இதுவேறுலகம் - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"செல்வத்திற்கு ஒளிக்கற்றை வடிவமாய் ருக்கு; மணிக்கு வாழ்வில் ஒளியேற்றும் செல்வம்; வியக்க வைக்கிறது கதை"

24. நிலா நிலா ஓடி வா! - luckylook
"மிக மிக வித்தியாசமாய் விண்வெளியில் கதைக்களம்; ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது."

25. சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா
"சில்லென்று ஒரு காதல், மின்னல் வேகத்தில்"

26. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 1 - யோசிப்பவர்
"42ஆம் பதிவுக்குச் செல்லவும்"

27. மம்மி..மம்மி.. - வசந்த்
"எப்போ கேட்டாலும் கிடைக்கும், அலுக்காத லிப்ட் இது."

28. லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு - kappiguy
"எல்லோரையும் வைத்து கமெடி கீமெடி செய்துவிட்டது இந்தப் பெரிய பட்ஜெட்டு ஸ்கிரிப்டு :-D"

29. முனி அடி (தேன்கூடு போட்டி) - செந்தில் குமார்
"அதிர வைக்கும் நிஜ நிகழ்வைப் பதிக்கும் கதை. பொய்த்துப் போகாதோ இக்கணமே?"

30. விரல் பிடிப்பாயா..? - வசந்த்
"பாட்டியைத் தந்தை பிரிந்ததைவிட விரைவாய்; தந்தையைத் தான் பிரிந்ததை விட விரைவாய்; தன் மகள் தன்னைவிட்டுப் பிரியப் போவது அறியாமல்..."

31. அண்ணே..லிப்ட் அண்ணே..! - வசந்த்
"இறுதிவரை யூகித்ததெல்லாம் இல்லாமல் புதிய கோணத்தில் திரும்பும் அருமையான சிறுகதை."

32. முன்னாவும் ,சில்பாவும். - umakarthick
"'இந்த வயசுல இதுலாம் சகஜம்னு பெற்றவர்களுக்கு புரிந்திருந்தால் வேறுமாதிரியல்லவா போயிருக்கும் முன்னாவின் கதை"

33. சபலம் - saran
"பேய் சொல்லும் சிறுகதை. யூகித்துக்கொள்ளுங்கள்."

34. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - Udhayakumar
"போன் போனதுக்கு அழுவதா? இல்லை போன போன் பழசுன்னு சிரிப்பதா?"

35. konjam lift kidaikkuma?? - Rajalukshmi
"அழகாய்த் தோன்றுகின்றன; சிறு சம்பவங்களும்; இக்கவிதையில் வந்ததினால்."

36. லாந்தர் விளக்கு. - வசந்த்
"அவுங்க எல்லாம் பத்திரமாப் போய்ச்சேந்தாங்களா? அட அந்தப் பொன்னம்மா கிழவியாச்சும் பத்திரமாப் போய்ச்சேந்தாங்களா?"

37. ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக - ஜி.கௌதம்
"உயரம் தூக்கிகள் உயரம் அனுபவிக்குமா என்ன? ஏறிச்சென்றவர்களில் ஒருவரேனும் கொஞ்சம் கை(லிப்ட்) கொடுத்திருந்தால்."

38. சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) ! - கோவி.கண்ணன்
"மாற்றங்களைச் சுமையாகக் கருதாமல் வரவேற்றால் அவைகளே வாழ்வை லிப்ட் செய்யும் - சொன்ன விதம் அருமை."

39. லிப்ட் ப்ளீஸ்!!! - வெட்டிப்பயல்
போஸ்டன் பாலா சொல்லியது போலவே "ராஜேஷ்குமார் நாவல் போல் ஒரேமூச்சில் படிக்க வைத்த க்ரைம் த்ரில்லர்"

40. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha
"தந்தைக்கும் மகனுக்குமான உறவுப் போட்டியைப் பெருமையுடன் சொல்வது நிறைவாய் இருக்கிறது. சூப்பர் கதை."

41. லிப்ட் கிடைக்குமா? (தேன்கூடு போட்டி) - madhumitha
"வாழ்க்கை எனும் லிப்ட்-டில் ஆபரேட்டர்களாய் மனிதர்கள். லிப்ட் கொடுத்தும் லிப்ட் வாங்கியும்.."

42. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 2 - யோசிப்பவர்
"இங்கிருந்து 63க்கு சிரமம் பார்க்காமல் செல்லவும்"

43. காடனேரி விளக்கு (சிறுகதை) - MSV Muthu
"வித்தியாசமாய் சொல்லியிருக்கிறார். விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஏய் யாருப்பா அது காடனேரி விளக்கு கேட்டது?"

44. கண்டிப்பாடா செல்லம்... - ramkumarn
"கண்டிப்பாடா செல்லம். கண்டிப்பா படிக்க வேண்டிய கதை. வெகு யதார்த்தம்"

45. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - 55 fiction - மாதங்கி
"?"

46. நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை
"நம்ம கதைதான், படித்துப்பாருங்க. பிறகு எப்படி இருக்கு சொல்லுங்க."

47. சர்தார்ஜி ஜோக் ஒன்று.... கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - ramkumarn
"புன்சிரிப்பு மினிமம் கியாரண்டி"

48. லிப்டாக இருக்கிறேனே..! - வசந்த்
"வசந்த் என்றாலே வரும் எதிர்பார்ப்பை விட அதிகம் தந்திருக்கிறார். படிக்க வேண்டிய கதை."

49. அவன் கண்விடல் - குந்தவை வந்தியத்தேவன்
"லேசாய்ப் பொறி தட்டினாலும், இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி விடும்போதுதான் நமக்கும் புரிகிறது."

50. கடவுள் கேட்ட லிஃப்ட் - சேவியர்
"கடவுள் வந்து லிஃப்ட் கேட்டது மட்டுமில்லாமல், பயமுறுத்தியும் வைக்கிறார்"

51. அவள் - நிர்மல்
"நமக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல நிர்மல்"

52. எங்க வீட்டு ராமாயணம் - சிதம்பரகுமாரி
"கீர்த்தனா இன் வொண்டர்லேண்ட்"

53. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்! - உமா கதிர்
"இந்த அனுபவம் சில அனுமானங்களையும் மீறி ஆச்சரியம் அளிக்கிறது."

54. போட்டி: பதிவுக்கு மேய்க்கி - bsubra786
"கூகிள் குதிரையில் லிப்ட் கேட்டு நம்மைப் பல இடங்களுக்கு கூட்டிச்செல்கிறார்"

55. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - வலைஞன்
"சிகரம் எட்டுமென்ற நம்பிக்கையே நமக்கும் உரமாய்"

56. தேன்கூடு போட்டிக்கு - வலைஞன்
"நிமிடத்தில் படிச்சிடலாம். வியப்பு தான் அகல சிலநேரம் பிடிக்கும்."

57. லிஃப்ட் கொடுத்தவர்கள் - அஹமது சுபைர்
"அந்தப் பெயர் தெரியாத பைக்காரர் லிப்ட் கொடுத்த விதம் பாரட்டுக்குரியது"

58. ஒரு தலைப்புச் செய்தி - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"ஒரு சிறு பொறியை வைத்து தீவிரவாதியை வளைத்குப் பிடிக்கும் இந்தப் போலிஸ் கதை உன்மையைல் போலிஸுக்கு ஒரு லிப்டுதான்."

59. லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு? - barath
"ஓவியம் வாங்கியதில் மீனாட்சிக்கு கிடைத்த லிப்டைப் போலவே இந்தக் கதையும் அவளைப் போன்றோருக்கு லிப்டாய் மலர்கிறது."

60. மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - தமிழில் - சரவ்.
"பயமுறுத்தாமல் ஒரு பேய்க்கதை. அதை மீண்டும் படிக்கத் தூண்டும் பாணி மிக அருமை."

61. மொழிபெயர்ப்பு - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"அது பூனை இல்லை எனத்தெரியும் நேரத்தில் த்ரில்லர் மாறி சோகம் அப்பிக்கொள்கிறது. அச்சோ."

62. தூக்குங்கள் தூக்குங்கள் - Ilackia
"நாம் படிக்க முயற்சிக்கையில் பதிவுகான பக்கமே கானாமல் போய் புதிர் போடுகிறது"

63. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 3 - யோசிப்பவர்
"கடேசியாக ஒருமுறை, கடைசிப் பதிவுக்கு (72) உடனடியாகச் செல்லவும்"

64. தூக்கல் வாழ்க்கை - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"நல்லாவே புரியுதுப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா - அருமை"

65. தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல்
"நம்ம ஊரு காதல் கதை ஜெயிக்காம போகுமா? கலக்கல் கதை"

66. அவசரமாய் போய்கொண்டிருந்தேன்... - தொட்டராயசுவாமி
"அவசரமாய் ஆட்டோவில் போய்கொண்டிருந்த வேகத்தை விட அவசரமாய் ஒரு கவிதை."

67. மெளனம் கலைந்தே ஓட.. - வசந்த்
"உணர்வுகளின் வலியும், வலிமையும் இக்கதைக்கு லிப்ட் கொடுக்கிறது."

68. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா- தேன்கூடு போட்டி - Anamika
"வராமல் போன பேருந்துக்கு கூடுதலாய் ஒரு நன்றி. இல்லையா பின்னே, இந்தக் கவிதை கிடைத்திருக்காதே"

69. அல்லக்கை - தேன்கூடு போட்டி சிறுகதை - இன்பா
"லிப்ட் என்ற வார்த்தையே கதையில் வராவிட்டாலும், தலைவர்களை லிப்ட் கொடுத்து பார்க்க ஆசைப்படும் தொண்டனைப்பற்றிய கதை"

70. மனசில் லிப்ட் கிடைக்குமா - சேவியர்
"மங்கை மனசில் லிப்ட் கேட்டு வருகிறது சிறுகவிதை; நம் உள்ளங்களிலும் லிப்ட் ஆகிறது."

71. அய்யா!, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா!! - kalaimarthandam
"தீர்க்கமாய் ஒரு முடிவுடன் முடியும் கதை, அதனை நம்மிடமும் விதைத்து விடுகிறது."

72. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - யோசிப்பவர்
"இன்னுமா தெரியவில்லை,
இது டைம் டிராவல் கதையென்று :-D "


சரி, நாம சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு. தப்பா எதுவும் சொல்லி இருந்தா சொல்லுங்க, திருத்திக்கிடலாம்.

தலைப்பு கொடுத்தவரு பேரு வந்துங்க :
'கொங்கு' ராசா,
சுறுசுறுப்பா விமர்சிச்சவரு பேரு
வந்துங்க : சோம்பேறி பையன்
ஆச்சரியப்பட வைத்தவரு பேரு வந்துங்க : வசந்த்



எல்லா படைப்புகளும் அருமை. படிச்சுப்
பாருங்க.

மறக்காம ஓட்டும் போட்டுடுங்க. உங்க ஓட்டு உண்மையிலேயே திறமைசாலிகளுக்கு லிப்ட் கொடுத்த மாதிரி இருக்கும் !

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்


21 comments:

Boston Bala said...

எல்லாவற்றுக்கும் விமர்சனம்...!!! நன்றி

உங்க வாக்கு யாருக்கு ;-)

முரட்டுக்காளை said...

//எல்லாவற்றுக்கும் விமர்சனம்...!!! நன்றி

நன்றி பாலா. கல்யாணப் பந்தியில (இல்லேன்னா, பஃபேயில)எல்லாமே கிடைச்சாலும் சிலவற்றை திரும்பத் திரும்ப கேட்போமே. அதுபோல, மீண்டும் படிக்க வைத்த கதைகளுக்கே/ கவிதைகளுக்கே நம்ம ஓட்டு. (அத்தோட நமக்கு நாமே திட்டத்தின் படி, நம்ம கதைக்கும்..)

ஆமா, நீங்க சொன்ன மாதிரி மின்னஞ்சல் செய்வீங்களா? :-D

முரட்டுக்காளை said...

பாலா சொன்னதை இங்கே பாருங்க...

கப்பி | Kappi said...

//28. லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு - kappiguy
"எல்லோரையும் வைத்து கமெடி கீமெடி செய்துவிட்டது இந்தப் பெரிய பட்ஜெட்டு ஸ்கிரிப்டு :-D"//

போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :D

இன்பா (Inbaa) said...

விமர்சனங்கள் அருமை. அனைத்துக் கதைகளையும் படித்து எழுதியவர்களை ஊக்குவித்ததிற்க்கு ஒரு ஓ!!!

கார்த்திக் பிரபு said...

hi frend..thanks for your comment abt my story..nalla kariyam seydhrukeerkal..parisu kidaikaa vittaalum adhutha muraiyum eludha thoodum ungalai ponravargalin vimarsanangal..mikka nandri

yata said...

முரட்டுக்காளை,

ரொம்ப ரொம்ப நன்றிங்க. அருமையா எழுதியிருக்கீங்க. படிக்கிறதை அடுத்தவங்க கூட பகிர்ந்துக்கறதே ரொம்ப நல்ல விசயம். அதிலயும் நீங்க அழகா ஒரு வரி விமர்சனம் கூட எழுதியிருக்கீங்க. பெரிய்ய்ய வேலை. வாழ்த்துக்கள்.

அப்புறம்,

////பீட்டா பிளாகருக்கு இந்த கிறுக்கல் பலகையை மாற்றியிருக்கிறேன். மறுமொழியிடுபவரின் பெயரில் பிரச்சனை இருக்கிறது. // யதா, பீட்டா டெம்ளேட்டில் என்னால் சில ஸ்கிரிப்டுகள் சேர்க்க முடியவில்லை. தேனி எழுத்துரு ஸ்கிரிப்டு உட்பட. உங்களால் எப்படி முடிந்தது? எனக்கு உதவ முடியுமா?//

உங்கள் கணக்கில் பிட்டா பிளாகரில் நுழைந்தால், டெம்ப்ளேட் என்னும் பக்கத்தில், 'Switch to Classsic Template' என்று ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதற்கு மாறிவிட்டால் போதுமானது. உங்களால் அனைத்து ஸ்கிரிப்டையும் இணைக்க முடியும். தமிழ்மணம் பட்டை, தேன்கூடு ஸ்கிரிப்ட்,டைனமிக் பாண்ட் எல்லாம் செய்ய முடியும்.

இரா. வசந்த குமார். said...

காளை..காளை..முரட்டுக் காளை... நன்றி தங்களது அன்பான பின்னூட்டங்களுக்கு...

முரட்டுக்காளை said...

//போட்ட பட்ஜெட்டை எடுத்துடலாம் இல்லையா? :D

கண்டிப்பா, இது சூப்பர் டூப்பர் ஹிட் கதையாச்சே.. நம்மளையும் அசிஸ்டெண்டா சேத்துக்குங்க.

//ஊக்குவித்ததிற்க்கு ஒரு ஓ!!!

ஓ போட்டதுக்கு நன்றி இன்பா. (அப்படியே ஒரு ஓட்டும் போட்டுட்டீங்க ன்னா, நல்லா இருக்கும்.. :-) )

நன்றி கார்த்திக் பிரபு, நல்ல கதை.. கண்டிப்பா நிறைய எழுதுங்க. நானும் படிக்க வரேன்.

யதா, மிக்க நன்றி.
நம்ம பிளாக்கர்ல நிறையா சரி செய்யணும். நேரம் எடுத்துக்கிட்டு சரி செய்யறேன்.
Classic Template பார்த்திருக்கிறேன். நல்ல யோசனை. மாற்றிப் பார்க்கிறேன்.

கதிர் said...

அருமையான பணி!

சத்தமில்லாம செய்திருக்கீங்க!

//"இந்த அனுபவம் சில அனுமானங்களையும் மீறி ஆச்சரியம் அளிக்கிறது."//

மிக்க நன்றி!!!

முரட்டுக்காளை said...

// காளை..காளை..முரட்டுக் காளை... நன்றி தங்களது அன்பான பின்னூட்டங்களுக்கு...

நன்றி வசந்த். நீங்களும் எல்லா கதைகளையும் படிச்சு உங்க கருத்துகளைச் சொன்னதுக்கு.. (மேனேஜர் கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி அடுத்த மாசமும் லீவு எடுத்திடுங்க)

//அருமையான பணி! சத்தமில்லாம செய்திருக்கீங்க!

நன்றி 'தம்பி'. உங்க லாரி இந்தப் பக்கம் வருமா? இன்னும் இடமிருக்கா?

k said...

விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி முரட்டுக்காளை.

மதுமிதா said...

நன்றி முரட்டுக்காளை

நீங்க அழகா ஒரு வரி விமர்சனம் எழுதி பகிர்ந்துக்கறதே ரொம்ப நல்ல விசயம் வாழ்த்துகள்.

நாமக்கல் சிபி said...

முரட்டுக்காளை,
முரட்டுத்தனமா படிச்சி தள்ளிட்டீங்க ;)

ஒரே வரியில் அட்டகாசமான விமர்சனம்... நம்ம கதையையும் சேத்துகிட்டதுக்கு நன்றி!!!

நீங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

ஓகை said...

முரட்டுக்காளை,

சிறந்த முய்ற்சியை செய்திருக்கிறீர்கள்.

என் நான்கு படைப்புகளுக்கும் நீங்கள் கொடுத்திருந்த அன்பான பின்னூட்டங்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி.

முரட்டுக்காளை said...

//விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி முரட்டுக்காளை. //
//நீங்க அழகா ஒரு வரி விமர்சனம் எழுதி பகிர்ந்துக்கறதே ரொம்ப நல்ல விசயம் வாழ்த்துகள். //
//ஒரே வரியில் அட்டகாசமான விமர்சனம்... நம்ம கதையையும் சேத்துகிட்டதுக்கு நன்றி!!! //
//அன்பான பின்னூட்டங்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி. //

நம்ம வலைபூவிற்கு வருகை தந்ததிற்கு நன்றி அனாமிகா, மதுமிதா, வெட்டிப்பயல், ஓகை !

நான் இந்தத் தலைப்பிற்கான படைப்புகளைப் படித்த பொழுது சில ஆக்கங்கள் சரியான வெளிச்சத்திற்கு வராமலே போய்விடும் எனத் தோன்றியது. எதோ நம்மாலான சிறு முயற்சி இந்த விமர்சனம்.

படித்ததில் பல படைப்புகள் ஆச்சரியப்படுத்தின. ஒரே தலைப்பில் இத்தனைக் கதைகள் / கட்டுரைகள் / கருத்துக்கள் / கவிதைகள் / கமெடிகள் படிப்பது நல்ல அனுபவம்.

ஓட்டுப்பதிவுகள் முடிந்த நிலையில், உங்களைப்போலவே முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துக்கள் (..ங்கள்)!


மீண்டும் வருவோம் !

கோவி.கண்ணன் [GK] said...

எப்படிங்க எல்லா படைப்பையும் படிச்சி முடித்ததும் இல்லாமல் ஆய்வு பண்ணி எழுதமுடிந்தது ?

பாராட்டுக்கள்...!

உங்களை பதிவுகளை நிதானமாக படிக்கவேண்டும். நிறைய விசயம் இருக்கிறது !

ராசுக்குட்டி said...

முரட்டுக்காளை, விமர்சனத்துக்கு நன்றி

காலந்தாழ்த்தியதுதான் என்றாலும்...

//கல்யாணப் பந்தியில (இல்லேன்னா, பஃபேயில)எல்லாமே கிடைச்சாலும் சிலவற்றை திரும்பத் திரும்ப கேட்போமே. // அட்டகாசம்! இப்போதான் தமிழ்மணத்திற்குள்ளும் வந்து விட்டீர்களே நிறைய எழுதுங்கள்! படிக்க காத்திருக்கிறோம்!

இரா. வசந்த குமார். said...

வாழ்த்துக்கள் காளை... நான்காம் இடத்தைக் கைப்பற்றியதற்கு..

முரட்டுக்காளை said...

//வாழ்த்துக்கள் காளை... நான்காம் இடத்தைக் கைப்பற்றியதற்கு..//

மிக்க நன்றி வசந்த் ! என் கதையை படித்து அழகாய் விமர்சனம் எழுதியதிற்கும் நன்றிகள் பல..!

Kumari said...

இவ்வளவு பொறுமையாய் படிச்சு, உங்க கருத்தை சொன்னதுக்கு நன்றி. அதுவும் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரோட கதை டைட்டில் சொன்னது ரெட்டிப்பு மகிழ்ச்சி :)