Thursday, September 14, 2006

நாங்கெல்லாம் அந்தக் காலத்தில..!!

நாங்கெல்லாம் அந்தக் காலத்தில முதல்ல ஈமெயில் செஞ்ச கதைய நெனச்சா இப்பவும் சிரிப்பு வருது... 98-ட்டுல கல்லூரி படிச்சிட்டிருந்த காலம். அப்ப எல்லாம் வீட்டில இணைய வசதி வைத்திருக்க வாய்ப்பே இல்லை. கல்லூரியில் தான் கணினிப் பக்கமே போக முடியும். அதுவும் ஒரு பழைய டாஸ் வகையா இருக்கும். 'சி' புரோகராம் தவிர வேற ஒண்ணும் அதில செய்ய முடியாது. அதனால புதுசா இந்த ஈமெயில்-ன்னா என்ன-ன்னு பார்க்கணும்-டா ஆரம்பிச்சான் நண்பன் ஒருத்தன். சரி, சனிக்கிழமை பாரதியார் யுனிவர்சிட்டி போயிரலாம்-னு முடிவானது.


அங்க தான் கல்லூரி அடையாள அட்டையை காண்பிச்சா பத்து ரூபாய்க்கு ஒரு மணி நேரம் 'பிரெவுஸ்' பண்ணலாம். பணத்தைக் 'கியு'வுல நின்னு கட்டி போய் உக்கார்ந்தா, கருப்பு வெள்ளை மாணிட்டரில வரி வரியா வருது இணையபக்கம் எல்லாம். ஆமை வேகம். ஒரு வழியா 'யாஹூ' ஈமெயில் போனோம். "டேய், நான் முதல்ல என் பேர எழுதிடடுமா?" - நம்ம நண்பன் கேக்குரான். அங்க பார்த்தா 'டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்' வரி வரியா ஒரு நாலு பக்கத்திற்க்கு மேல வந்துகிட்டே இருக்கு. "ஏண்டா, இதுல எதாச்சும் தப்பு பண்ணிட்டா நம்மள எதாச்சும் பண்ணிருவானுங்களா?" பயந்துட்டான் நம்ம நண்பன். ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து முக்கியமான 'டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்'ஸ வேகமா எழுதி வெச்சுகிட்டான் பாருங்க.. அவன் முகத்தில ஒரே பெருமிதம். பின்னால ரொம்ப நாள் சொல்லி சிரிப்பா சிரிச்சு வெச்சோம்.

என்னதான் இன்னைக்கு கணிணி துறையைலேயே வேலைக்குச் சேர்ந்து பிளாக் எல்லாம் எழுதற அளவுக்கு நாம வளர்ந்திட்டாலும், இதை ஒரு தன்னடக்கம் தேவைப்படும்போதெல்லாம் நெனச்சுப் பாத்துக்குவேன். (டேய்.. வேணாம்டா. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல? - மனசாட்சி)

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்

3 comments:

Udhayakumar said...

are you from GCT?????

முரட்டுக்காளை said...

உதயகுமார்-ன்னா, நான் KCT-ங்க...

ராசுக்குட்டி said...

//அங்க தான் கல்லூரி அடையாள அட்டையை காண்பிச்சா பத்து ரூபாய்க்கு ஒரு மணி நேரம் 'பிரெவுஸ்' பண்ணலாம்//

ஆனா அந்த ஒரு மணி நேரத்திற்கு ஒரே ஒரு யாஹூ பக்கம்தான் லோட் ஆகியிருக்கும். நம்மள்லாம் நெறய இடத்துல டெர்ம்ஸ் & கண்டிஷன்ஸ் படிக்காமத்தான் சிக்கிர்றது!