எல்லாருக்கும் வணக்கம்.
இதனால் பொதுமக்களுக்கு தெரிவிச்சுக்க விரும்புவது என்னன்னா, வேணாம் மக்களே, இந்தப் முதல் பதிவு வெறும் சுயபுராணம். நீங்களா தலைப்பைப் பார்த்து யாரோ யாரையோ மறுபதிவு போட்டு தாக்கிட்டிருக்காங்க-ன்னு நினைச்சுகிட்டு படிக்கலாமுன்னு வந்தா ஏமாற்றம்தான்.
இதுக்கும் மேல படிக்கறீங்களா.. வாங்க..
நாம பொறந்து வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூர் தான். ரொம்ப நாளா நம்மளை கோவை, ஈரோடு, சேலத்தைத் தாண்டி வெளி உலகைக் காண்பிக்கவே இல்லை. அதனால ரொம்ப நாளா உலகம் தெரியாத வாலிபனா வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.
ஸ்கோலு படிக்கும்போதே தமிழார்வம் தலைக்கு வந்து நகைச்சுவை நாடகம் போட்டதுதான் நம்மளுக்குள்ள இருக்கிற திறமைய முதல்ல இந்த உலகுக்கு (??) அறிவிச்சது. அப்புறம், கல்லூரியில நாம படிச்ச காலகட்டத்தில நாம தான் பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கல்லூரி இதழில் கவிதை எழுதுவது-ன்னு கலக்கிப்புட்டோமில்ல..
இப்பத்தான், மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்பியல், வணிகவியல், கணிணியியல், விளம்பரம், விற்பனை, வியாபாரம், இப்படி எல்லாத்தையும் படிச்சிட்டு (நான் எங்கே, எப்படி இருக்கவேண்டியவன்? ) இப்பொ போயி ஒரு பெரிய்ய கணிணிப் பாட்டிக்கு (இப்ப வந்திருக்க கணிணிக்கெல்லாம் பாட்டி... மெயின் பாட்டி !!) உக்கார்ந்து பேன் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
இப்ப இங்க வந்து எழுதச்சொல்லி நண்பன் வற்புறுத்திக் கூப்பிடவும், ("சீக்கிரம் வாடா, நான் உனக்கும், நீ எனக்கும் மாறி மாறி பின்னூட்டம் போட்டுக்கலாம்..")
இதோ வந்தாச்சு...!
-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்
Thursday, September 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
வாப்பா நண்பா வா... நீ இல்லாமத்தான் நமக்கு ஒரு கம்பெனி இல்லாம இருந்துச்சு...
வலைப்பூவுக்கு வருக... வருக என வரவேற்பது....
WELCOME TO BLOG WORLD RAJ.
VAREN VARENU varama poyiduviingalo nenachen..Good.
vanduttinga
// வாப்பா நண்பா வா...
நண்பா ராசு, முதல் ஆளா வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிகள் பல.. இனிமே கம்பெனி கண்டிப்பா இருக்கும்.
ஆமாங்க அனிதா, எப்படியோ கடைசி பஸ் பிடிச்சு வத்துட்டேங்க.. :-D.
நம்ம ராசுவோட கதை சொல்லும் சுவராஸ்யமான நடையும், உங்களோட கதம்பக் கவிதைகளும் தானே நமக்கு வலைப்பூ வளர்க்கும் ஆர்வத்தை உண்டாக்கியது...
ராசு, அனிதா - நன்றி மீண்டும் வருக ! :-)
வலைப்பதிவுகளுக்கு வருக வருகவென வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் !!
மணியன், மிக்க நன்றி !
வலைப்பதிவுகளுக்கு நான் புதிது.
தங்கள் பதிவுகளையும் விரைவில் பார்க்க வருகிறேன் !
-ராஜ்.
COOL RAJ...
site supreba irukku.
vaazhga...valarga...
நன்றி mimmu !
வாங்க பொன்ஸ். இப்படி சிரிச்சு வைச்சதுக்கு ஒரு பதில் சிரிப்பான் நானும் போட்டுக்கறேன்.
:)
!!!
இதனால் பொதுமக்களுக்கு தெரிவிச்சுக்க விரும்புவது என்னன்னா,
அந்த நாட்டாமை படத்துல வர்ற தமுக்கு பார்ட்டி நீங்கதானா???
//நீங்களா தலைப்பைப் பார்த்து யாரோ யாரையோ மறுபதிவு போட்டு தாக்கிட்டிருக்காங்க-ன்னு நினைச்சுகிட்டு படிக்கலாமுன்னு வந்தா ஏமாற்றம்தான்.//
இது மாதிரி நிறைய பேரு எங்கள ஏமத்திட்டதால கொஞ்சம் வெவரமாதான் படிச்சோம், நாங்க ஒண்ணூம் ஏமாறலை!!
வலையுலகத்துக்கு வருகை தந்திருக்கும் முரட்டுக்காளையை வருக வருக என வரவேற்கிறோம்! பதிவுகளையும் முரட்டுத்தனமாக எழுதிறாதீங்க!
:))
வாங்க!!! வாங்க!!!
விமர்சனம் எல்லாம் போட்டு கலக்கிட்டு வரீங்க ;)
//நாங்க ஒண்ணூம் ஏமாறலை!! //
நம்ம தம்பியை ஏமாத்த முடியுமா?
// பதிவுகளையும் முரட்டுத்தனமாக எழுதிறாதீங்க.. //
இல்லீங்..ங்க.. நாம தீர்க்கமான, ஆழமான, ஆணித்தரமான-வோடு நிறுத்திக்கொள்வதா உத்தேசம்..
(ஏயப்ப்பா.. இன்னும் எதுவுமே உருப்படியா எழுதலைன்னாலும் இந்தக் முரட்டுக்காளையோட கோயமுத்தூர் குசும்புக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல..)
//விமர்சனம் எல்லாம் போட்டு கலக்கிட்டு வரீங்க ;) //
நன்றி வெட்டிப்பயல். வலையில சும்மா பூந்து விளையாடுரீங்க.. அடிக்கடி சந்திக்கலாம்..
வருகைக்கு நன்றி தம்பி, வெட்டிப்பயல் ! மீண்டும் வருக ! :-)
வாப்பா மின்னல்
Post a Comment